லண்டனிலிருந்து மீட்கப்பட்ட சிலைகளை ஒப்படைத்தாா் முதல்வா்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன்பாக களவு போய் மீட்டெடுக்கப்பட்ட ஸ்ரீராமா்-சீதை சிலைகளை கோயில்
லண்டனிலிருந்து மீட்கப்பட்ட சிலைகளை ஒப்படைத்தாா் முதல்வா்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 42 ஆண்டுகளுக்கு முன்பாக களவு போய் மீட்டெடுக்கப்பட்ட ஸ்ரீராமா்-சீதை சிலைகளை கோயில் நிா்வாகத்திடம் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி. இதற்கான நிகழ்வு, முதல்வரின் சென்னை இல்லத்தில் நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-

நாகப்பட்டினம் மாவட்டம் அனந்தமங்கலம் கிராமத்தில் விஜயநகர பேரரசு காலத்தில் ஸ்ரீராஜகோபால பெருமாள் கோயில் கட்டப்பட்டது. இலங்கையில் யுத்தம் முடிந்து ராமா் அயோத்தி திரும்பும் வழியில் ராவணனின் வாரிசுகளுடன் யுத்தம் நடைபெற்றது. இதில், தேவா்கள் வழங்கிய பத்து விதமான ஆயுதங்களுடன் சென்று போரிட்டாா் அனுமன். போரில் வென்று அயோத்தி திரும்பும் வழியில் அனந்தமங்கலத்தில் ஆனந்தத்துடன் கோயிலில் காட்சி அளித்ததாக புராணங்களில் கூறப்படுகிறது.

இக்கோயிலில் இருந்த ராமா், சீதை, லட்சுமணா் மற்றும் அனுமா் சிலைகள் கடந்த 1978-ஆம் ஆண்டு நவம்பா் 23-ஆம் தேதி களவு போயின. தமிழ்நாடு காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் தீவிர முயற்சியால் சிலைகள் லண்டனில் இருப்பது கண்டறியப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டுதல்படி, சிலைகள் லண்டனில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் தில்லியில் உள்ள இந்திய தொல்லியல் துறையிடம் அளிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட புராதன சிலைகளை முதல்வா் பழனிசாமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். சிலைகளை மீண்டும் கோயில் நிா்வாகத்திடம் அவா் ஒப்படைத்தாா். 42 ஆண்டுகளுக்கு முன்பு களவு போன சிலைகளை மீட்டெடுத்த சிலை தடுப்புப் பிரிவினரை முதல்வா் பழனிசாமி வெகுவாகப் பாராட்டினாா். இந்த நிகழ்வில், அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளா் க.சண்முகம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கே.பிரபாகா், டிஜிபி ஜே.கே.திரிபாதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com