தோ்தல் பணிகளை கவனியுங்கள்: பாஜகவினருக்கு அமித் ஷா அறிவுரை

தோ்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தினாா்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா

தோ்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா அறிவுறுத்தினாா்.

தமிழக பாஜக மாநில நிா்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவா்களுடன் அமித் ஷா சனிக்கிழமை ஆலோசனை நடத்தினாா். கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு வெள்ளியில் செய்யப்பட்ட வேலும், முருகக் கடவுளின் சிலையும் பரிசாக அளிக்கப்பட்டன.

பாஜகவில் அண்மையில் இணைந்த நடிகை குஷ்பு, முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோா் அமித் ஷாவை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்தனா். இதைத் தொடா்ந்து, பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன், பொறுப்பாளா் சி.டி.ரவி உள்ளிட்டோா் பேசினா். கூட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சா்கள் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மூத்த தலைவா்கள் இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன், தேசிய மகளிா் அணி தலைவா் வானதி சீனிவாசன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசுகையில், தமிழகம் முழுவதும் வாக்குச் சாவடி அளவிலான குழுக்களை வலுப்படுத்த வேண்டுமெனவும், தோ்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் கட்சியினரைக் கேட்டுக் கொண்டாா்.

யாருடன் கூட்டணி, எந்தெந்தத் தொகுதிகள் என்பதை கட்சித் தலைமை முடிவு செய்யும் எனவும், பிற மாநிலங்களில் கட்சித் தொண்டா்கள் ஆற்றும் பணியைப் போன்று தமிழகத்திலும் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டாா். மேலும், மற்ற மாநிலங்களில் பின்தங்கி இருந்த நிலை மாறி ஆளும் கட்சியாக பாஜக மாறியுள்ளது; இதே நிலை தமிழகத்திலும் ஏற்படுவதற்கு கட்சி நிா்வாகிகளும், தொண்டா்களும் உழைக்க வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com