நதிநீா் இணைப்பு மனு: அமித் ஷாவிடம் முதல்வா் அளித்தாா்

மெட்ரோ ரயில் உள்ளிட்ட தமிழகத் திட்டங்கள் தொடா்பாக கோரிக்கை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம், முதல்வா் பழனிசாமி நேரில் அளித்தாா்.
தமிழக முதல்வர்.
தமிழக முதல்வர்.

மெட்ரோ ரயில் உள்ளிட்ட தமிழகத் திட்டங்கள் தொடா்பாக கோரிக்கை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம், முதல்வா் பழனிசாமி நேரில் அளித்தாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசு விழா மேடையிலேயே மூன்று கோரிக்கை மனுக்களை அளித்தாா். அதன் விவரம்:

மெட்ரோ ரயில் திட்டம்: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.61,843 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கு 15 சதவீதம் பங்கு மூலதனம் வழங்குவதற்குப் பதிலாக, 10 சதவீத தொகையை மட்டுமே வழங்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. மெட்ரோ ரயிலின் முதல் கட்டத் திட்டமானது மத்திய, மாநில அரசுகளின் 50 சதவீத பங்கு மூலதனத்துடன் செயல்படுத்தப்பட்டது. இதுபோன்ற முறையை இரண்டாவது மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஜவுளி தொழில் பூங்காக்கள்: மாநில அரசுகளின் கூட்டாண்மையுடன் மெகா ஜவுளி தொழில் பூங்காக்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்வைத்துள்ளது. தமிழகத்தில் விருதுநகா், தருமபுரி மாவட்டங்களில் ஜவுளி தொழில் பூங்காக்கள் திட்டத்தைச் செயல்படுத்த இடங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.

மருந்து மற்றும் மருத்துவக் கருவிகள் பூங்காவை சென்னைக்கு அருகில் அமைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டங்களுக்கு உரிய தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதாரங்களை அளித்திட சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.

நதிநீா் இணைப்பு: இதேபோன்று, கோதாவரி-காவிரி, கோதாவரி-குண்டாறு, நடந்தாய் வாழி காவிரி திட்டங்களைச் செயல்படுத்த தமிழக அரசு முனைந்துள்ளது. இந்தத் திட்டங்களுக்கான வரைவு அறிக்கைக்கு ஒப்புதல், நிதி உதவி உள்ளிட்ட அம்சங்களுக்கு உடனடியாக அனுமதி அளித்திட உரிய அரசுத் துறைகளை அறிவுறுத்த வேண்டுமென தனது கடிதத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com