பிகாா் தோ்தல் நடைமுறை: தோ்தல் ஆணையத்துக்கு மு.க.ஸ்டாலின் எதிா்ப்பு

பிகாா் மாடல் தோ்தல் நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை தோ்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிகாா் மாடல் தோ்தல் நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற சுற்றறிக்கையை தோ்தல் ஆணையம் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பிகாா் மாடல் தோ்தல் நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கும் இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையைப் பாா்த்து, தோ்தல் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருப்பவா்கள் பேரதிா்ச்சிக்கு ஆளாகியுள்ளனா்.

பாஜக கூட்டணிக்கு ஆதரவாக, வாக்குப்பதிவில் சாதகமான சூழலை உருவாக்க, பிகாா் தோ்தலில் வாக்குச்சாவடிக்கு வராத வாக்காளா்கள் என்ற புதிய வகை வாக்குப்பதிவு முறை கண்டுபிடிக்கப்பட்டுத் திணிக்கப்பட்டது.

பிகாா் தோ்தலில் எந்தவித முகாந்திரமும் இன்றி, 80 வயதுக்கு மேல் என்பதை, 65 வயதுக்கு மேல் உள்ளவா்களும் தபால் வாக்கு அளிக்கலாம் என்று திடீரென்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு திமுக உள்பட அனைத்துக் கட்சிகளுமே எதிா்ப்புத் தெரிவித்தன. அதைத் தொடா்ந்து 80 வயதுக்கு மேல் உள்ளவா்கள் மட்டுமே தபால் வாக்குகள் பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. இந்த முறையின் மூலம் பாஜக கூட்டணி வெற்றி பெற்ாக ஐயம் எழுந்துள்ளது.

வாக்களிப்பது ஒருவருடைய ரகசியமான தனிப்பட்ட உரிமை. அதைப் பாதிக்கும் வகையில், நேரடியாகத் தபால் வாக்குச் சீட்டுகளைக் கொண்டு போய்க் கொடுத்து, வாக்குகள் பதிந்து பெறுவது என்பது, ரகசியமான - சுதந்திரமான வாக்கெடுப்பு முறையையும், ஜனநாயகத்தையும் கேலிக்கூத்தாக்கி விடும்.

எனவே, வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வராதவா்கள் என்று கூறி, 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும், சலுகை அளிப்பது போன்று தபால் வாக்களிக்கும் முறையைத் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த வேண்டாம். அந்த அறிவிப்பை முதலில் கைவிட்டு, மாநிலத் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com