ரூ.1,000 கொடுத்து சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்: புதிய திட்டம் அறிமு
ரூ.1,000 கொடுத்து சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்: புதிய திட்டம் அறிமு

ரூ.1,000 கொடுத்து சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்: புதிய திட்டம் அறிமுகம்

சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் புதிதாக, ரூ.1000 மாத வாடகையுடன் சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


சென்னை: சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் புதிதாக, ரூ.1000 மாத வாடகையுடன் சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஏற்கனவே, சைக்கிள் ஷேரிங் திட்டத்தை சென்னை மாநகராட்சி தொடக்கி செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மாத வாடகைக்கு சைக்கிளை வீட்டுக்கே எடுத்துச் செல்லும் வசதி அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், பொதுமக்கள் மாத வடகைக்கு சைக்கிளை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு வாரத்துக்கு ரூ.299, 15 நாள்களுக்கு ரூ.599, 30 நாள்களுக்கு ரூ.999ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சைக்கிள் பெற விரும்புவோர், 044 - 26644440 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொணடு தங்களது சைக்கிள் தேவையை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

முன்பதிவு செய்ததும், பயனாளரின் வீட்டு முகவரிக்கே, சைக்கிளை சென்னை மாநகராட்சி கொண்டு வந்து கொடுக்கும். அப்போது பொதுமக்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகை முன்பணமாக செலுத்த வேண்டும். அதன்பிறகு தேர்வு செய்த நாள்கள் வரை, சைக்கிளை பயனாளர் பயன்படுத்திக் கொள்ளலாம். பின்னர், சென்னை மாநகராட்சியே வந்து சைக்கிளைப் பெற்றுச் செல்லும்.

இந்த திட்டத்தின் துவக்கமாக, சென்னையில் ஷெனாய் நகர், அண்ணாநகர் மேற்கு, திருமங்கலம், முகப்பேர், அண்ணாசாலை, பூவிருந்தமல்லி நெடுஞ்சாலை உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சைக்கிள் நிலையங்களில் இருக்கும் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com