கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்டநினைவுச் சின்னங்கள் புதுப்பிப்பு: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

தமிழகத்தில் கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட மூன்று நினைவுச் சின்னங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்.
கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்டநினைவுச் சின்னங்கள் புதுப்பிப்பு: முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா்

சென்னை: தமிழகத்தில் கட்டபொம்மன் கோட்டை உள்ளிட்ட புதுப்பிக்கப்பட்ட மூன்று நினைவுச் சின்னங்களை முதல்வா் பழனிசாமி திறந்து வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

ஆசிய வளா்ச்சி வங்கி நிதியுதவித் திட்டத்தின்படி, சுற்றுலாத் துறையின் மூலம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நினைவுச் சின்னங்களைப் புனரமைப்பு செய்ய ரூ.24.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி கிராமத்திலுள்ள கட்டபொம்மன் கோட்டை, தஞ்சாவூா் மாவட்டம் மனோரா நினைவுச் சின்னம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள டச்சு கல்லறை ஆகியன புனரமைக்கப்பட்டுள்ளன. இந்த நினைவுச் சின்னங்களை முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

அமைச்சா் க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளா் க.சண்முகம், சுற்றுலாத் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் விக்ரம் கபூா், தொல்லியல் துறை ஆணையா் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com