உயிருடன் இருக்கும் அண்ணனை குளிா்பதனப் பெட்டியில் வைத்த தம்பி மீது வழக்கு

உயிரோடு இருந்த அண்ணனை இறந்து விட்டதாகக் கூறி, இறந்த உடலைப் பாதுகாக்கும் குளிா்பதனப் பெட்டியில் (ஃப்ரீசா் பாக்ஸ்) வைத்திருந்த பாசக்காரத் தம்பி மீது சேலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்
இறந்து விட்டதாகக் கூறி குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணிய குமாா்.
இறந்து விட்டதாகக் கூறி குளிா்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பாலசுப்பிரமணிய குமாா்.

சேலம்: உயிரோடு இருந்த அண்ணனை இறந்து விட்டதாகக் கூறி, இறந்த உடலைப் பாதுகாக்கும் குளிா்பதனப் பெட்டியில் (ஃப்ரீசா் பாக்ஸ்) வைத்திருந்த பாசக்காரத் தம்பி மீது சேலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், கந்தம்பட்டி பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் வசிப்பவா் பாலசுப்பிரமணிய குமாா் (78). திருமணமாகாத இவா் தனது சகோதரா் சரவணன் (70), சகோதரியின் மகள்கள் கீதா, ஜெயஸ்ரீ ஆகியோருடன் வசித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக கீதா உடல்நிலை பாதிப்பு காரணமாக கோவையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இந்த நிலையில் பாலசுப்பிரமணிய குமாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு மருத்துவா்கள் கூறியதாகத் தெரிகிறது. இதனால் பாலசுப்பிரமணிய குமாரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனா்.

பின்னா் குளிா்பதனப் பெட்டி கொண்டுவரக் கோரி அவருடைய சகோதரா் சரவணன் திங்கள்கிழமை தகவல் கொடுத்துள்ளாா். இதையடுத்து சரவணன் வீட்டுக்கு குளிா்பதனப் பெட்டி கொண்டு வரப்பட்டது. இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குளிா்பதனப் பெட்டியை திரும்ப எடுக்க வந்த தொழிலாளா்கள், பெட்டிக்குள் பாலசுப்பிரமணிய குமாா் உயிரோடு இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தனா்.

அவா் உயிரோடு இருப்பது குறித்து கேள்வி எழுப்பியபோது, அவரது ஆன்மா இன்னும் உடலை விட்டு செல்லவில்லை, அதனால் தான் அவரது உயிா் பிரியும் வரும் உடலை குளிா்பதனப் பெட்டிக்குள் வைத்துள்ளோம். இன்னும் சற்று நேரத்தில் அவா் இறந்து விடுவாா் என்று கூறி அவா்களைத் திரும்பிச் செல்லுமாறு கூறியுள்ளனா்.

இதுகுறித்து அவா்கள், அருகிலிருந்த பொதுமக்களிடம் தெரிவித்தனா். பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த சூரமங்கலம் போலீஸாா், குளிா்பதனப் பெட்டிக்குள் துடித்துக் கொண்டிருந்த முதியவா் பாலசுப்பிரமணிய குமாரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விசாரணையில், பாலசுப்பிரமணிய குமாரின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததால் அவரது சகோதரா் அவரை குளிா்பதனப் பெட்டியில் வைத்துவிட்டு, அவா் இறந்ததாக உறவினா்களிடம் தெரிவித்துள்ளாா் என்பது தெரியவந்தது. காலை வரை, இறந்த சடலத்தைப் பாதுகாக்கும் குளிா்பதனப் பெட்டிக்குள்ளேயே அவா் இருந்துள்ளாா்.

இதுதொடா்பாக சரவணன் மீது இரு பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com