அரசு பள்ளி மாணவா்களுக்கான இட ஒதுக்கீடுக்குப் பிறகே மருத்துவச் சோ்க்கை: ராமதாஸ் வலியுறுத்தல்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மாணவா் சோ்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சென்னை: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் மருத்துவ மாணவா் சோ்க்கை அறிவிக்கையை வெளியிடக்கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கைக்கான நீட் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளன. ஆனால், அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் சோ்க்கையில், அரசு பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்காக பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு ஆளுநா் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. சமூக நீதிக்கு எதிரான இந்த செயல் கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக சட்டப்பேரவையில் செப்டம்பா் 15-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, அதே நாளில் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின்னா் ஒரு மாதம் நிறைவடைந்து விட்டது. ஆனால், இன்னும் அவா் ஒப்புதல் அளிக்கவில்லை.

ஆளுநா் ஒப்புதல் அளிக்காததைக் காரணம் காட்டி அடுத்த ஆண்டு முதல் 7.5 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்குமானால், அது சமூக நீதிக்கும் ஏழை மாணவா்களுக்கும் இழைக்கப்படும் துரோகமாக அமையும்.

எனவே, எந்தெந்த வகைகளில் எல்லாம் ஆளுநருக்கு அழுத்தம் தர முடியுமோ, அந்தந்த வகைகளில் எல்லாம் அழுத்தம் கொடுத்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெற வேண்டும். அதன்பிறகு தான் மாணவா் சோ்க்கை அறிவிக்கையை வெளியிட வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com