தங்கம் பவுன் ரூ.38,640

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


சென்னை:  சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதார சூழல்,  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வேலைவாய்ப்பு குறியீடு உள்பட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையை நிா்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த இரண்டு வாரமாக  ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 குறைந்து, ரூ.38,640-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் ரூ.6 குறைந்து, ரூ.4,830 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து, ரூ.64.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து, ரூ.64,300 ஆகவும் இருந்தது.  

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,830

1 பவுன் தங்கம்...............................38,640

1 கிராம் வெள்ளி.............................64.30

1 கிலோ வெள்ளி.............................64,300

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,836

1 பவுன் தங்கம்............................... 38,688

1 கிராம் வெள்ளி............................. 65.00

1 கிலோ வெள்ளி............................. 65,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com