கே.கே.பட்டி சுகாதார நிலையத்தில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு பரிசோதனை 

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய ஊராட்சி சுகாதார பணியாளர்களுக்கு பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.
கே.கே.பட்டி சுகாதார நிலையத்தில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு பரிசோதனை 
கே.கே.பட்டி சுகாதார நிலையத்தில் உள்ளாட்சி பணியாளர்களுக்கு பரிசோதனை 

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி ஆகிய ஊராட்சி சுகாதார பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது.

இம்முகாமில் பாரத பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தின் கீழ்  சுகாதார துப்புரவு பணியாளர்களுக்கு இரத்தப் பரிசோதனையில் சர்க்கரை அளவு, கொழுப்புச் சத்து அளவு, ஹீமோகுளோபின் அளவு, உப்புச்சத்து அளவு பரிசோதிக்கப்படுகிறது.

பெண் பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், மார்பகப் பரிசோதனை, கருப்பை வாய் பரிசோதனை செய்யப்பட்டது.

முதல் கட்டமாக கரூர் நாகை முத்தம்பட்டி ஊராட்சி பணியாளர்களுக்கு பரிசோதனைகள் நடைபெற்றன.

கருநாக்க முத்தன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மொக்கப்பன், மாவட்ட கவுன்சிலர் தமயந்தி, வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.

மருத்துவ அலுவலர் டாக்டர்கள் சுதா, முருகானந்தம், சித்த மருத்துவ அலுவலர் சிராஜ்தீன், பேரூராட்சி செயல் அலுவலர் தாமரை, செவிலியர்கள் சுப்புலட்சுமி, இந்திரா, சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் செய்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com