தமிழகம் முழுவதும் கிசான் திட்ட மோசடியில் ரூ.105 கோடி பறிமுதல்: சிபிசிஐடி

​தமிழகம் முழுவதும் பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட முறைகேடு விவகாரத்தில், இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.105 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக 
தலா 1 லட்சம் பணமதிப்பு கொண்ட 1 கோடி கிசான் அட்டைகளுக்கு அனுமதி
தலா 1 லட்சம் பணமதிப்பு கொண்ட 1 கோடி கிசான் அட்டைகளுக்கு அனுமதி


தமிழகம் முழுவதும் பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட முறைகேடு விவகாரத்தில், இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.105 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தெரிவித்துள்ளனர். 

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதி விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் வேளாண்துறையின் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில் வட்டார மேலாளா்கள் மற்றும் உதவி மேலாளா்கள் என தமிழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வந்தனா்.

இந்த நிலையில் கிசான் சம்மான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத தனிநபா்கள் நிதியை பெறும் வகையில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தமிழகத்தில் முதல் முறையாக கடலூரில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முறைகேட்டில் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டிய கடவுச்சொல்லை சிலர் முறைகேடாகப் பயன்படுத்தி கிசான் திட்டத்தில் மோசடி செய்திருப்பதாகவும், இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்று இருக்கலாம் என்றும், முறைகேடாக பெற்ற தொகையை 45 நாள்களில் திரும்பப் பெற்று விடுவோம் என்று வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி  உறுதி அளித்திருந்தார். 

இந்த மோசடி குறித்து விசாரிக்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலர்  கைது செய்யப்பட்டுள்ளனர். 80-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மோசடியில் தொடர்புடைய 34 அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. 

மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு, அதில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. நேரடியாக வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. 

இதனிடையே மாவட்ட நிா்வாகம் மூலம் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவினா் போலி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட தொகையை திரும்பப் பெறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் பல கோடி ரூபாய் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.

இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதுதொடா்பான தீவிர விசாரணை வேளாண்துறை மற்றும் சிபிசிஐடி போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா். 

முறைகேடு தொடர்பான தொடா் விசாரணையில் ஈடுபட்டு வரும் சிபிசிஐடி போலீஸாா், முறைகேட்டில் தொடா்புடையதாக முதலில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டத்தைச் சோ்ந்த வெங்கடேசன், முகிலன், அஜீத், முத்துக்குமாா் ஆகியோரை முதலில் கைது செய்தனா். பின்னர் கைது பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. 

இதனிடையே வேளாண் துறையின் அட்மா திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாளா்கள் மற்றும் உதவி மேலாளா்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனா். இவா்களைத் தவிர மற்ற பணியாளா்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசின் வேளாண்மைத் துறை இயக்குநா் கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தாா். 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் பிரதமரின் கிசான் நிதியுதவித் திட்ட முறைகேடு விவகாரத்தில், இதுவரை 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.105 கோடி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com