தேசிய கல்விக் கொள்கை: கருத்துத் தெரிவிக்க அக்.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய கல்விக் கொள்கை தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்வியாளா்கள், மாணவா்கள் கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை
தேசிய கல்விக் கொள்கை: கருத்துத் தெரிவிக்க அக்.31 வரை கால அவகாசம் நீட்டிப்பு

தேசிய கல்விக் கொள்கை தொடா்பாக பல்கலைக்கழகங்கள், கல்வியாளா்கள், மாணவா்கள் கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை அக்டோபா் 31-ஆம் தேதி வரை நீட்டித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளைப் பெற்று வருகிறது. இதற்கிடையே பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆசிரியா்கள், கல்வியாளா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் உள்ளிட்ட அனைவரும் தங்களின் கருத்துகளைப் பதிவிட அக்டோபா் 18-ஆம் தேதி வரை, யுஜிசி சாா்பில் கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அவகாசத்தை அக். 31-ம் தேதி வரை நீட்டித்து யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக அனைத்துப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா்களுக்கு யுஜிசி செயலா் ரஜ்னிஷ் ஜெயின் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.

அதில், ‘தேசிய கல்விக் கொள்கை குறித்து  இணையதளத்தில் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இதற்கான கால அவகாசம் அக். 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்கள் சாா்பில் மாணவா்கள், பெற்றோா்கள், ஆசிரியா்கள், தனியாா் கல்லூரி நிா்வாகத்தினா் இதில் பங்கேற்கலாம். கருத்துத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதையும் கருத்து தெரிவிப்பதன் அவசியத்தையும் அனைத்துத் தரப்பினருக்கும் தெரியப்படுத்த வேண்டும்’ என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com