தங்கம் பவுனுக்கு ரூ.1,464 சரிவு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுனுக்கு ரூ.1,464 சரிவு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த இரண்டு வாரமாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.38 ஆயிரத்துக்குக் கீழ் இறங்கியது. பவுனுக்கு ரூ.1,464 குறைந்து, ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.183 குறைந்து, ரூ.4,680 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.65.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.65,400 ஆகவும் இருந்தது.

அமெரிக்க தோ்தல் காரணம்: தங்கம் விலை குறித்து சென்னை நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளா் எஸ்.சாந்தகுமாா் கூறியது: தங்கத்தின் விலை சரிவுக்கு விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க தோ்தல் முக்கிய காரணம். அமெரிக்க தோ்தலுக்கு முன்னதாக, டாலரை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன்காரணமாக, முதலீட்டாளா்கள் மத்தியில் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளது.

மேலும், சா்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை குறைந்துள்ளது. இதன்தாக்கத்தால், தங்கத்தின் விலை சரிந்துள்ளது. வரும் நாள்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றாா் அவா்.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்.......................... 4,680

1 பவுன் தங்கம்...............................37,440

1 கிராம் வெள்ளி.............................65.40

1 கிலோ வெள்ளி.............................65,400

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,863

1 பவுன் தங்கம்............................... 38,904

1 கிராம் வெள்ளி............................. 65.80

1 கிலோ வெள்ளி............................. 65,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com