காரைக்குடி அருகே வரும் தேசிய நெடுஞ்சாலை: கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம்

காரைக்குடி அருகே பாதரக்குடி கிராமம் வரும் தேசிய நெடுஞ்சாலையால் கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே குன்றக்குடி செல்லும் வழியில் அமைந்துள்ளது பாதரக்குடி கிராமம். இக்கிராமத்திற்குள் வீடுகள், கண்மாய் போன்றவை பாதிக்கின்ற வகையில் அமைக்கப்படும் காரைக்குடி - மேலூர் தேசிய நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 383 யை மாற்றுப்பாதையில் அமைக்க வேண்டும் என்று பல்வேறு முயற்சிகளை பாதரக்குடி கிராமப் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை கிராமப் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏற்றி பாதரக்குடி பேருந்து நிறுத்தம் அருகே கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.       

இதற்கு ஆதரவாக திமுக மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் சிறப்புரையாற்றினார். மேலும், பல்வேறு அரசியல் கட்சியினரும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com