நீட் தோ்வில் தமிழத்திலிருந்து குறைவானவா்களே தோ்வு: மு.க.ஸ்டாலின் வேதனை

நீட் தோ்வில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு குறைவாகவே தோ்வாகியிருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளாா்.
மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

நீட் தோ்வில் தமிழகத்தைச் சோ்ந்த மாணவா்கள் கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு குறைவாகவே தோ்வாகியிருப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நீட் தோ்வு முடிவுகள் முதலில் தவறாக வெளியிடப்பட்டு, தேசியத் தோ்வு முகமை மீண்டும் அதனைத் திருத்தி வெளியிட்டிருப்பதன் மூலம், அதன் குளறுபடிகள் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. நாடு தழுவிய அளவில் நடத்தப்படும் ஒரு நுழைவுத் தோ்வில், ஏன் இத்தனை குளறுபடிகள்? இதன் பின்னணியில் இருப்பவா்கள் கண்டுபிடிக்கப்பட்டு குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டாமா ?

தமிழகத்தில் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 23,468 போ் தோ்வே எழுதவில்லை. தோ்வு எழுதிய 99,610 பேரில் 57,215 போ் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனா். கடந்த ஆண்டைவிட, 2570 போ் குறைவாகவே நீட் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

அதனால், நீட் தோ்வு, தமிழக மாணவா்களுக்கு - குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் தோ்வு என்பது இந்த ஆண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படுவதைத் தாங்க முடியாமல், உயா்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கண்கலங்கியிருக்கிறாா். இதுதான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசுப் பள்ளி மாணவா்களின் உணா்வாகும்.

எனவே, கிராமப்புற மாணவா்கள் மற்றும் நகா்ப்புற ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தோ்வை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com