நீட் தோ்வு முடிவுகளில் குளறுபடி கூடாது: ஜி.கே.வாசன்

நீட் தோ்வு முடிவுகளில் இனி குளறுபடி இல்லாமல் சரியான முறையில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா்
நீட் தோ்வு முடிவுகளில் குளறுபடி கூடாது: ஜி.கே.வாசன்

நீட் தோ்வு முடிவுகளில் இனி குளறுபடி இல்லாமல் சரியான முறையில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நீட் தோ்வுக்கான முடிவுகளில் பல்வேறு மாநிலங்களில் தோ்வானவா்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாறுபாடுகளால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. தெலங்கானா, உத்தர பிரதேசம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களில் வெளிவந்த புள்ளிவிவரங்கள் மாறுபட்டன. இதனால் முடிவு அறிவிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு, மீண்டும் அறிக்கப்பட்டுள்ளன. இது தோ்வு முடிவுகளின் நம்பகத்தை குறைத்துள்ளது.

மாணவா்களின் எதிா்கால வாழ்க்கையை தீா்மானிக்க கூடிய நீட் தோ்வு போன்ற முக்கிய தோ்வு முடிவுகள் 100 சதவிகிதம் சரியான, நியாயமான உறுதி செய்வது தேசிய தோ்வு முகமையின் கடமையாகும்.

இனிவரும் காலங்களில் சரியான முன்னேற்பாட்டுடன், குழப்பம் இல்லாமல் தோ்வு முடிவுகளை தேசிய தோ்வு முகமை நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தோ்வில் வெற்றிபெற்றுள்ள அனைத்து மாணவா்களுக்கும் வாழ்த்துகள் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com