மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா: கல்வி அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் பங்கேற்பு

நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 205 மெட்ரிக் பள்ளி நிர்வாகங்களுக்கு தொடர் அங்கீகார ஆணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கினார்.
நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 205 மெட்ரிக் பள்ளி நிர்வாகங்களுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மெட்ரிக் பள்ளிகளுக்கு  தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தனியார் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா தலைமை வகித்தார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க. முனுசாமி வரவேற்றார். எம்எல்ஏக்கள் இரா. குமரகுரு, அ. பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்று, நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 205 மெட்ரிக் பள்ளி நிர்வாகங்களுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கினார்.
 மெட்ரிக் பள்ளிகள் இயக்க க இயக்குனர் கருப்பசாமி மற்றும் தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் 56 பள்ளிகள், கள்ளக்குறிச்சியில் 60, கடலூரில் 66, அரியலூரில் 25 பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com