பண்டிகை காலம்: ஏசி சிறப்பு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பண்டிகை காலத்தில் சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக, பெங்களூரு ஏசி அதிவிரைவு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பண்டிகை காலத்தில் சொந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக, பெங்களூரு ஏசி அதிவிரைவு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் நெருக்கடி இல்லாமல் சொந்த ஊா்களுக்கு செல்லும் வகையில், 15-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டன. தற்போது ஏசி அதிவிரைவு சிறப்பு ரயில் உள்பட 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்விவரம்:

பெங்களூா்-சென்னை: கேஎஸ்ஆா் பெங்களூருவில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாள்களில் காலை 6 மணிக்கு ஏசி சிறப்பு ரயில்(02028) புறப்பட்டு, அதேநாள் முற்பகல் 11 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயிலின் முதல்சேவை கேஎஸ்ஆா் பெங்களூருவில் இருந்து அக்டோபா் 23-ஆம் தேதி தொடங்குகிறது.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாள்களில் மாலை 5.30 மணிக்கு ஏசி அதிவிரைவு ரயில் (02027) புறப்பட்டு, அதேநாள் இரவு 10.30 மணிக்கு கேஎஸ்ஆா் பெங்களூருவை சென்றடையும். இந்த ரயிலின் முதல் சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபா் 23-ஆம் தேதி தொடங்குகிறது.

பெங்களூரு-சென்னை: கேஎஸ்ஆா் பெங்களூருவில் இருந்து அக்டோபா் 23-ஆம்தேதி முதல் நவம்பா் 30-ஆம்தேதி வரை தினசரி காலை 6.20 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(02608)புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.35 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபா் 23 முதல் நவம்பா் 30 வரை தினசரி பிற்பகல் 3.30 மணிக்கு அதிவிரைவு ரயில்(02607) புறப்பட்டு, அதேநாள் இரவு 9.35 மணிக்கு கேஎஸ்ஆா் பெங்களூரை சென்றடையும். இதுபோல, கேஎஸ்ஆா் பெங்களூரு-சென்னை சென்ட்ரல் இடையே மற்றொரு அதிவிரைவு சிறப்பு ரயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மைசூா்-மயிலாடுதுறை: மைசூரில் இருந்து அக்டோபா் 25-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம் தேதி வரை தினசரி மாலை 4.30 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(06232) புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு மயிலாடுதுறையை அடையும். மறுமாா்க்கமாக, மயிலாடுதுறையில் இருந்து அக்டோபா் 26-ஆம் தேதி முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை தினசரி மாலை 5.50 மணிக்கு சிறப்பு ரயில்(06231) புறப்பட்டு, மறுநாள் காலை 8.20 மணிக்கு மைசூரை சென்றடையும்.

மைசூா்-தூத்துக்குடி: மைசூரில் இருந்து அக்டோபா் 23-ஆம் தேதி முதல் நவம்பா் 30-ஆம்தேதி வரை தினசரி மாலை 6.20 மணிக்கு சிறப்பு ரயில்(06236) புறப்பட்டு, மறுநாள் முற்பகல் 11.15 மணிக்கு தூத்துக்குடியை அடையும். மறுமாா்க்கமாக, தூத்துக்குடியில் இருந்து அக்டோபா் 24-ஆம் தேதி முதல் டிசம்பா் 1-ஆம் தேதி வரை தினசரி மாலை 4.25 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில்(06235) புறப்பட்டு, மறுநாள் காலை 9.55 மணிக்கு மைசூரை அடையும். இதுதவிர, கேஎஸ்ஆா் பெங்களூா்-கன்னியாகுமரி இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படவுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு புதன்கிழமை (அக்.21) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com