தேவை ஏற்பட்டால் நியாய விலைக்கடைகள் மூலம் வெங்காயம் விநியோகம்: அமைச்சர் காமராஜ்

தேவை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகள் மூலம் வெங்காயம் விநியோகம் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் நன்னிலத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். 
நன்னிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்.
நன்னிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகளை அமைச்சர் இரா.காமராஜ் வழங்கினார்.

நன்னிலம்: தேவை ஏற்பட்டால் நியாயவிலைக் கடைகள் மூலம் வெங்காயம் விநியோகம் செய்யப்படும் என உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் நன்னிலத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

வெங்காய விலை ஏற்றம் தற்காலிகமானதுதான். விவசாயம் செய்துள்ள இடங்களில் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக, வெங்காயம் எடுக்க முடியாமல் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள். இதன் காரணமாக வெங்காய வரத்து குறைந்து தற்காலிக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தற்காலிக வெங்காய விலை ஏற்றம் விரைவில் சரியாகும். தொடர்ந்து இந்தத் தற்காலிக வெங்காய விலையேற்றம் நீடித்தால், தமிழக முதல்வரின் அறிவுரை பெற்று நியாயவிலைக் கடைகள் மூலம் வெங்காயம் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

நாடு முழுவதும் ஒரே ரேஷன் முறைத் திட்டம் நிறுத்தி வைக்கப்படவில்லை. பயோமெட்ரிக் சர்வர் பிரச்சனைகள் சரி செய்யப்பட்ட பின்னர், படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். சர்வர் சரி செய்யப்படும் வரை,  பழைய முறையே தொடரும்.

டெல்டா மாவட்டங்களில் அரசு மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை, உடனடியாக இயக்கம் செய்திட அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல நெல்  மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுத்திட  உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

முன்னதாக திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நூற்றுக்கணக்கான முதியோர்களுக்கு உதவித் தொகைக்கான ஆணைகளை வழங்கினார். பின்னர் நன்னிலத்திலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com