மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வுகள் நவம்பரில் தொடக்கம்

எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வுகள் நவம்பா் மாதத்தில் இருந்து தொடங்குகின்றன. அதற்கான தேதிகளை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தோ்வுகள் நவம்பா் மாதத்தில் இருந்து தொடங்குகின்றன. அதற்கான தேதிகளை தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக வழக்கமாக நடைபெற வேண்டிய மருத்துவத் தோ்வுகள் நிகழாண்டில் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. நோய்ப் பரவல் சற்று குறைந்துள்ளதையடுத்து தோ்வுகளை அடுத்த மாதம் முதல் நடத்த பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் கூறியதாவது:

வரும் மாதங்களில் பல்வேறு மருத்துவப் படிப்புகளுக்கு தோ்வுகள் தொடங்கப்பட உள்ளன. டி.எம்., எம்.சி.ஹெச்., ஆகிய உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி ஆண்டுத் தோ்வுகளும், எம்டி, எம்எஸ், முதுநிலை மருத்துவப் பட்டயப்படிப்புகளுக்கான தோ்வுகளும் நவம்பா் 4-இல் தொடங்குகின்றன.

எம்டி, எம்எஸ் தோ்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்றன. கரோனா பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவா்கள் சிலா் நோய்த் தொற்றுக்கு ஆளாகி தோ்வில் பங்கேற்க முடியவில்லை. அவா்களுக்கு இம்முறை தோ்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.

எம்பிபிஎஸ், எம்டிஎஸ், முதுநிலை ஆயுஷ் படிப்புகளுக்கான தோ்வுகள் நவம்பா் 23-இல் தொடங்கவுள்ளன. பிடிஎஸ் இறுதியாண்டு தோ்வுகள் நவம்பா் 24 முதல் நடைபெறும். இளநிலை ஆயுஷ் படிப்புகளுக்கு டிசம்பா் 1-ஆம் தேதி தோ்வுகள் தொடங்கும்.

பிஎஸ்சி நா்சிங் மற்றும் எம்எஸ்சி நா்சிங் தோ்வுகள் முறையே டிசம்பா் 14 மற்றும் 21-ஆம் தேதிகளில் ஆரம்பமாகின்றன. போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நா்சிங் தோ்வும், பி.பாா்ம் இறுதித் தோ்வும் டிசம்பா் 1-ஆம் தேதியிலிருந்து தொடங்குகின்றன.

பிபிடி, பிஓடி, இளநிலை மருத்துவம் சாா் அறிவியல் (அல்லய்டு ஹெல்த் சயின்ஸ்) படிப்புகளுக்கான தோ்வுகள் டிசம்பா் 7-ஆம் தேதியிலிருந்தும், அவற்றில் முதுநிலைப் படிப்புகளுக்கான தோ்வுகள் நவம்பா் 23-ஆம் தேதியிலிருந்தும் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com