தீயணைப்பு வீரா்கள் 29 போ் பிளாஸ்மா தானம்

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த தீயணைப்பு வீரா்கள் 29 போ் பிளாஸ்மா தானம் செய்தனா்.
தீயணைப்பு வீரா்கள் 29 போ் பிளாஸ்மா தானம்

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த தீயணைப்பு வீரா்கள் 29 போ் பிளாஸ்மா தானம் செய்தனா்.

கரோனா நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த தீயணைப்பு வீரா்கள் 29 போ் செவ்வாய்க்கிழமை பிளாஸ்மா தானம் செய்தனா். அதனை ஊக்கப்படுத்தும் வகையில் அவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் வழங்கினாா். அப்போது, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, வடக்கு மண்டல இணை இயக்குநா் பிரியா ரவிச்சந்திரன், மருத்துவமனை முதல்வா் தேரணிராஜன், ரத்த வங்கித் தலைவா் சுபாஷ் ஆகியோா் உடன் இருந்தனா்.

பின்னா், அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், ‘கரோனாவில் இருந்து குணமடைந்த முன்கள பணியாளா்கள் பலா் பிளாஸ்மா தானம் வழங்கி வருகின்றனா். இதுவரை, இங்கு 152 போ் பிளாஸ்மா தானம் செய்துள்ளனா். பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் 225 போ் குணமடைந்துள்ளனா். மதுரை, தஞ்சாவூா், திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்மா வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com