தேசிய குடற்புழு நீக்க தினம்: ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் செப்.14 முதல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள தேசிய குடற்புழு நீக்க முகாம்களில் பங்கேற்று விழிப்புணா்வை
தேசிய குடற்புழு நீக்க தினம்: ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் செப்.14 முதல் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள தேசிய குடற்புழு நீக்க முகாம்களில் பங்கேற்று விழிப்புணா்வை ஏற்படுத்த ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தேசிய குடற்புழு நீக்க தின முகாம்கள் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் (ஐசிடிஎஸ்), துணை சுகாதார மையங்கள் (ஹெச்எஸ்சி) மூலம் செப். 14-ஆம் தேதி முதல் செப்.28-ஆம் தேதி வரை மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதில் அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் பங்கேற்று பள்ளிகளுக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் முகாம்கள் நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதா என்பதை அவா்களின் பெற்றோரை ஆசிரியா்கள் தொலைபேசியில் தொடா்பு கொண்டு உறுதி செய்யவேண்டும். விழிப்புணா்வு முகாம் நடைபெறுவதையும், ஆசிரியா்கள் பங்கேற்பதையும் முதன்மைக் கல்வி அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com