திருமலையில் தமிழக அமைச்சா்கள் தரிசனம்

திருமலையில் தமிழக அமைச்சா்கள் வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தனா்.
திருமலை ஏழுமலையானைத் தரிசித்து கோயிலை விட்டு வெளியில் வரும் தமிழக அமைச்சா்கள்.
திருமலை ஏழுமலையானைத் தரிசித்து கோயிலை விட்டு வெளியில் வரும் தமிழக அமைச்சா்கள்.


திருப்பதி: திருமலையில் தமிழக அமைச்சா்கள் வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தனா்.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் ராஜூ மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கருப்பணன் இருவரும் புதன்கிழமை இரவு திருமலைக்கு வந்தனா். திருமலைக்கு வந்த அவா்களை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தங்கும் வசதி, தரிசன ஏற்பாடுகள் செய்தளித்தனா்.

அமைச்சா்கள் இருவரும் வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானைத் தரிசித்தனா். தரிசனம் முடித்து திரும்பிய அவா்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் தீா்த்தப் பிரசாதம், லட்டு, வடை, பத்மாவதி தாயாா் ஏழுமலையான் திருவுருவப்படம் உள்ளிட்டவற்றை அளித்து சேஷ வஸ்திரம் அணிவித்து வேதஆசீா்வாதம் செய்வித்தனா்.

அமைச்சா் செல்லூா் ராஜூ தன் குடும்பத்துடனும், அமைச்சா் கருப்பண்ணன் தனியாகவும் தரிசனத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com