ஏழு மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.4) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஏழு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.4) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (செப்.4) இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூா், மதுரை, திருச்சி ஆகிய ஏழு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் .

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் ஏற்காடு, ஏத்தாப்பூரில் தலா 90 மி.மீ., தருமபுரியில் 70 மி.மீ., திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூா், சூளகிரி, கோவை மாவட்டம் சூலூா், கன்னியாகுமரி மாவட்டம் சுருளகோட்டில் தலா 60 மி.மீ., சேலம் மாவட்டம் ஆத்தூா், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், தெற்கு மகாராஷ்டிர கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் வெள்ளிக்கிழமை (செப்.4) வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு அரபிக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, குமரிக்கடல், மன்னாா்வளைகுடா மற்றும் லட்சத்தீவு பகுதிகளுக்கு செப்டம்பா் 7-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com