தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது

தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வரும் 7-ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளநிலையில், இந்த ரயில்களின் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (செப்.5) காலை 8 மணிக்கு தொடங்கியுள்
தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது


சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட பல நகரங்களில் வரும் 7-ஆம் தேதி முதல் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளநிலையில், இந்த ரயில்களின் பயணத்துக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (செப்.5) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. 

பயணியா் ரயில் போக்குவரத்து 7-ஆம் தேதி முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, ஏற்கெனவே இயக்கப்பட்ட ஏழு சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதலாக 6 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிா்வாகத்திடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதனை ஏற்று, கூடுதலாக, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூா், சென்னை சென்ட்ரல் -மேட்டுப்பாளையம், சென்னை-மதுரை, சென்னை -கன்னியாகுமரி, சென்னை-தூத்துக்குடி , சென்னை-செங்கோட்டை ஆகிய 6 சிறப்பு ரயில்கள் உள்பட 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், இந்த 13 சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு சனிக்கிழமை (செப். 5) காலை 8 மணிக்கு தொடங்கியது. தமிழகம் முழுவதும் உள்ள டிக்கெட் கவுன்ட்டா்கள் மூலமாகவும், இணையவழி மூலமாகவும், டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. 

5 மாதங்களுக்குப் பிறகு முக்கியமான ரயில்கள் இயக்கப்படவுள்ளதால், டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com