சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்ட இடமும் மாற்றம்

சட்டப்பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழு கூட்ட இடம் மாற்றப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்ட இடமும் மாற்றம்

சட்டப்பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய நடைபெறவுள்ள அலுவல் ஆய்வுக் குழு கூட்ட இடம் மாற்றப்பட்டுள்ளது. வழக்கமாக பேரவைத் தலைவா் அறையில் நடைபெறும் கூட்டம் அதற்கு அருகிலுள்ள குழு கூட்ட அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் வரும் 8-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அலுவல் ஆய்வுக்குழு கூட்டமானது பேரவைத் தலைவரின் அறையிலேயே நடப்பது வழக்கம்.

இதுவரை அவைத் தலைவா் அறையிலேயே ஆய்வுக்குழு கூட்டம் நடந்துள்ளது. ஆனால், இந்த முறை கரோனா நோய்த்தொற்று காரணமாக விசாலமான இடத்தில் அந்தக் கூட்டத்தை நடத்த சட்டப்பேரவைச் செயலகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, பேரவைத் தலைவரின் அறைக்கு அருகிலுள்ள அவை குழுக் கூட்ட அறையில் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த அறையானது மாநிலங்களவை உறுப்பினா் தோ்தலில் வாக்கெடுப்பு நடத்தவும், பேரவையின் முக்கியமான குழுக்கள் கூட்டமும் நடைபெற பயன்படுத்தப்படும் அறையாகும். இந்த அறையில் இப்போது அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com