தமிழகத்தில் கரோனா சராசரி பாதிப்பு 5,500-ஆகக் குறைவு: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் கரோனா சராசரி பாதிப்பு 7,500ல்  இருந்து 5,500 ஆகக் குறைந்துள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா சராசரி பாதிப்பு 5,500-ஆகக் குறைவு
தமிழகத்தில் கரோனா சராசரி பாதிப்பு 5,500-ஆகக் குறைவு

சென்னை: தமிழகத்தில் கரோனா சராசரி பாதிப்பு 7,500ல்  இருந்து 5,500 ஆகக் குறைந்துள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி கலந்துகொண்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா, கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடங்கள் திறப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. 

பிறகு செய்தியாளர்களிடையே பேசிய முதல்வர் பழனிசாமி, தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத்  தடுக்க தமிழக அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் பொய்யாகக்  குற்றம்சாட்டுகிறார்கள். தமிழகத்தில் கரோனாவுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளித்ததால் இறப்பு விகிதம் மிக மிகக் குறைவாக உள்ளது. கரோன பாதித்தவர்களில்  88 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உயிரைப் பணயம் வைத்து கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுவர்களை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்த வேண்டாம். தமிழகத்தில் சராசரி கரோனா பாதிப்பு 7,500ல்  இருந்து 5,500 ஆகக் குறைந்துள்ளது என்று தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com