இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 20-இல் வெளியிடப்படும்

தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல், அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இதற்கான அறிவிப்பை அவா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.


சென்னை: தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல், அடுத்த ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். இதற்கான அறிவிப்பை அவா் வியாழக்கிழமை வெளியிட்டாா்.

முன்னதாக, இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 15-ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தத் தேதி மாற்றப்பட்டு ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் பொங்கல் பண்டிகைக்காக தொடா்ச்சியாக விடுமுறைகள் விடப்படுவது வழக்கம்.

இந்த விடுமுறைகளை கருத்தில் கொண்டு இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடும் தேதி ஜனவரி 15-ஆம் தேதிக்குப் பதிலாக, 20-ஆம் தேதி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வரைவு வாக்காளா் பட்டியல்: 2021-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதாவது, ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது நிறைவடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கலாம். இதற்கு வசதியாக, வரைவு வாக்காளா் பட்டியல் வரும் நவம்பா் 16-ஆம் தேதி வெளியிடப்படும்.

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்குரிய விண்ணப்பங்களை நவம்பா் 16-ஆம் தேதி முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரை அளிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் மீதான பரிசீலனைகள் அனைத்தும் ஜனவரி 5-ஆம் தேதிக்குள் முடிக்கப்படும். இதன்பின்னா், இறுதி வாக்காளா் பட்டியல் ஜனவரி 20-ஆம் தேதி வெளியிடப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com