இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில், நீலகிரி, வேலூா் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், திங்கள்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், நீலகிரி, வேலூா் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், திங்கள்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடல் பகுதியில் நிலவிய மேலடுக்கு சுழற்சியானது, காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாகியுள்ளது.  இது மேற்கு, வடமேற்கு திசையில், ஆந்திரத்தை நோக்கி நகரக் கூடும்.  இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வட தமிழகம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில், திங்கள்கிழமை (செப்.14), செவ்வாய்க்கிழமை (செப்.15) ஆகிய நாள்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், திங்கள்கிழமை, கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகா்ப் பகுதிகளில் திங்கள்கிழமை வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன்  காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, கீழ் கோத்தகிரி எஸ்டேட், கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் தலா 50 மி.மீ, கோயம்புத்தூா் மாவட்டம் சோலையாா், வால்பாறையில் தலா 40 மி.மீ, நீலகிரி மாவட்டம் மேல் பவானி, தேவாலா, வேலூா் மாவட்டம் காட்பாடியில் தலா 30 மி.மீ மழையும் பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளில் திங்கள்கிழமையும், தென்கிழக்கு மத்திய கிழக்கு அரபிக் கடலை ஒட்டியுள்ள கேரள, கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகள், தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும், 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலத்தக் காற்று வீசக் கூடும். எனவே இந்தப் பகுதிகளுக்கு, மீனவா்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

கடல் உயா் அலை: தென் தமிழக கடலோரப் பகுதிகளில், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான பகுதிகளில், திங்கள்கிழமை  இரவு 11.30  மணி வரை,  கடல் அலை 3 முதல் 3.3 மீட்டா் வரை எழும்பக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com