சென்னை கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது

தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. 
சென்னை கலைவாணர் அரங்கம்.
சென்னை கலைவாணர் அரங்கம்.

தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் முகக்கவசம் அணிந்து பேரவையில் பங்கேற்றனர். பேவைத் தொடங்கியதும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்எல்ஏ ஜெ.அன்பழகன், எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் கரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தை பேரவைத் தலைவர் தனபால் நாளைக்கு ஒத்திவைத்தார். நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரும் வாசகம் அடங்கிய முகக்கவசத்தை அணிந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் பேரவைக் கூடடத்தில் பங்கேற்றனர்.  வழக்கமாக தலைமைச் செயலகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டம், கரோனா தொற்று அபாயம் காரணமாக தற்போது திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்குக்கு மாற்றப்பட்டுள்ளது.

இன்று தொடங்கியம் சட்டப்பேரவைக் கூட்டம் 3 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி முதலமைச்சா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள் என அனைவரும் செல்வதற்கு தனித்தனியாக வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com