கம்பத்தில் அண்ணா பிறந்தநாள் விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் அண்ணாவின் 112 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உருவப் படத்திற்கு அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க, ம.தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கம்பத்தில் அண்ணா பிறந்தநாள் விழா
கம்பத்தில் அண்ணா பிறந்தநாள் விழா

தேனி மாவட்டம் கம்பத்தில் அண்ணாவின் 112 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உருவப் படத்திற்கு அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க, ம.தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 112 வது பிறந்தநாளை முன்னிட்டு கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க, ம.தி.மு.க கட்சி சார்பில் தனித்தனியாக அண்ணாவின் உருவப் படம்
வைக்கப்பட்டிருந்தது.

அ.தி.மு.க சார்பில்  நகரச்செயலாளர் ஜெகதீஸ் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 

தி.மு.க சார்பில் நகரச்செயலாளர் வக்கீல் துரை நெப்போலியன் தலைமையிலும், அ.ம.மு.க சார்பில் நகரச்செயலாளர் பா.ராஜாமணி தலைமையிலும்,ம.தி.மு.க சார்பில் நகரச்செயலாளர் வி.எஸ்.கே. ராமகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com