சிங்காரப்பேட்டை அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அதிமுக கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
சிங்காரப்பேட்டை அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அதிமுக கட்சியின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் சேட்டு குமார்,  சிங்காரப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் சங்கரநாராயணன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சத்திய நாராயண மூர்த்தி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன், தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர் தீபக், அத்திப்பாடி ஊராட்சி மன்றத்தலைவர் சுதா குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிங்காரப்பேட்டை பேருந்து நிலையம் எதிரே உள்ள உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர், நிகழ்ச்சியில்  மற்றும் ஒன்றிய நகரக் கிளைக் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com