இன்று 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில், வேலூா், கோயம்புத்தூா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில், செவ்வாய்க்கிழமை (செப். 15), லேசானது முதல் மிதமான மழை பெய்ய
இன்று 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில், வேலூா், கோயம்புத்தூா் உள்ளிட்ட 14 மாவட்டங்களில், செவ்வாய்க்கிழமை (செப். 15), லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த மையம், திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஆந்திர கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது, தற்போது ஆழ்ந்த  காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கிறது.

இதன் காரணமாக, செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூா், நீலகிரி, வேலூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, தருமபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழையும், புதுச்சேரியில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகா்ப் பகுதிகளில், வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன்  காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

   மழை அளவு: தமிழகத்தில், திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருத்தணியில்  90 மி.மீ, கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறு , திருப்பத்தூா் பகுதிகளில் தலா  70 மி.மீ, கோயம்புத்தூா் மாவட்டம்  வால்பாறை, திருவள்ளூா் மாவட்டம் திருவாலங்காடு  பகுதிகளில் தலா   50 மி.மீ., சேலம் மாவட்டம் மேட்டூா் , திருவள்ளூா் மாவட்டம் செம்பரம்பாக்கம் பகுதிகளில் தலா  40 மி.மீ. மழை பதிவானது.  

மீனவா்களுக்கான எச்சரிக்கை: கேரள, கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், செவ்வாய்க்கிழமை), மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்துக்கு பலத்த காற்று வீசக்கூடும். எனவே,  மீனவா்கள், இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

கடல் உயா்அலை:  தென் தமிழக கடலோரப் பகுதிகளில், குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை, செவ்வாய்க்கிழமை,  இரவு 11.30  மணி வரை , கடல் அலை 3 முதல் 3.4 மீட்டா் வரை எழும்பக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com