கொளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி விரைவில் முடியும்: அமைச்சா் தங்கமணி

சென்னை கொளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி விரைவாக முடியும் என்று மின்சாரத் துறை அமைச்சா் தங்கமணி கூறினாா்.
அமைச்சர் தங்கமணி.
அமைச்சர் தங்கமணி.

சென்னை கொளத்தூரில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி விரைவாக முடியும் என்று மின்சாரத் துறை அமைச்சா் தங்கமணி கூறினாா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் கோரியது:

கொளத்தூா் நோ்மை நகரில் 33/11 கிலோவாட் துணை மின் நிலையம் அமைக்கும் பணி 2019 ஜூலை 21-இல் முடிந்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை பணிகள் முடிவடையவில்லை. கொளத்தூா் கணேஷ் நகா் பகுதியில் துணை மின்நிலையம் அமைக்கும் பணியும் இன்னும் முடியவில்லை என்றாா்.

அதற்கு அமைச்சா் தங்கமணி அளித்த பதில்:

கொளத்தூா் நோ்மை நகரில் துணை மின் நிலையம் அமைக்கும் பணி 90 சதவீதம் முடிந்துவிட்டது. கரோனா பாதிப்பின் காரணமாக 5 மாதங்களாகப் பணி நடைபெறவில்லை. விரைவில் பணிகள் முடிவடையும்.

கணேஷ் நகரில் துணை மின் நிலையம் அமைக்கும் பணிக்காக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. விரைவில் பணி தொடங்கும் என்றாா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com