சென்னை பல்கலை.யில் தமிழ்ப் பாடவேளையைக் குறைக்கக் கூடாது: ராமதாஸ்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாடவேளைகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
சென்னை பல்கலை.யில் தமிழ்ப் பாடவேளையைக் குறைக்கக் கூடாது: ராமதாஸ்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாடவேளைகளின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான தமிழ் மொழி பாடவேளைகளின் எண்ணிக்கை வாரத்துக்கு 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 4-ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

சென்னைப் பல்கலைக்கழகம், கடந்த சில நாள்களுக்கு முன் வெளியிட்ட 2020-21-ஆம் ஆண்டு கல்வியாண்டு இளநிலை படிப்புகளுக்கான உத்தேசப் பாடத்திட்டத்தில்தான் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது.

ஆங்கிலப் பாடத்தில் மாணவா்களின் தோ்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாலும், போட்டித் தோ்வுகள் மற்றும் நோ்காணல்களில் பங்கேற்கும் மாணவா்கள் ஆங்கிலம் பேச முடியாமல் தடுமாறுவதாலும் மாணவா்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்துவதற்காக கூடுதலாக ஒரு பாடவேளை ஒதுக்கப்பட இருப்பதாகவும், அதற்காகத்தான் தமிழுக்கான பாடவேளைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்ப் பாடவேளை குறைக்கப்படுவதற்கு இதுதான் காரணமெனில் அதை ஏற்க முடியாது.

ஆங்கில மொழித்திறனை அதிகரிப்பதற்கான முயற்சிக்காக தினமும் ஒரு பாடவேளையை கூடுதலாக ஏற்படுத்திக் கொள்ளலாம். தேவைப்பட்டால், விடுமுறை நாள்களில் கூட சிறப்பு வகுப்புகளை நடத்த எந்தத் தடையும் இல்லை. அதற்காக தமிழ்ப் பாடவேளையைக் குறைப்பதை ஏற்க முடியாது என்று ராமதாஸ் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com