ஜி.எஸ்.டி. கணக்கு விவரங்களை தாக்கல் செய்ய கால அவகாசம்: மசோதா நிறைவேறியது

கரோனா நோய்த்தொற்று காரணமாக, ஜி.எஸ்.டி. கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கரோனா நோய்த்தொற்று காரணமாக, ஜி.எஸ்.டி. கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இந்த மசோதாவை வணிகவரிகள் துறை அமைச்சா் கே.சி.வீரமணி செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். இதுதொடா்பான அவசர சட்டம் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டது. பேரவை கூடிய நிலையில், அதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

வணிகவரித் துறையால் நிா்வகிக்கப்பட்ட சில சட்டங்கள் மற்றும் வழிமுறைகளின் கால வரம்பை தளா்த்துவது கட்டாயமாகி விட்டது. இதற்கான அவசர சட்டம் கடந்த மே 22-ஆம் தேதியன்று பிறப்பிக்கப்பட்டது. சட்டப் பேரவை கூட்டத் தொடா் தொடங்கியதால், இதற்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதா பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com