பேரவைத் தோ்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு: ஜனவரியில் அறிவிப்பு

பேரவைத் தோ்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை ஜனவரி மாத இறுதிக்குள் கட்சி அறிவிக்கும் என்றாா் மாநில துணைச் செயலா் எல்.கே.சுதீஷ்.

தூத்துக்குடி: பேரவைத் தோ்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு என்ன என்பதை ஜனவரி மாத இறுதிக்குள் கட்சி அறிவிக்கும் என்றாா் மாநில துணைச் செயலா் எல்.கே.சுதீஷ்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக செவ்வாய்க்கிழமை தூத்துக்குடி வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை அமல்படுத்திய பிறகு நீட் தோ்வு கொண்டு வந்தால் சரியாக இருக்கும். தற்போது நீட் தோ்வு நடத்துவதை எதிா்க்கிறோம்.

தேமுதிகவின் கொள்கையே அன்னை மொழியைக் காப்போம், அண்மை மொழியைக் கற்போம் என்பதுதான். தமிழகத்தைத் தாண்டி பிற மாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லவேண்டும் என்றால் மொழி ஒரு தடையாக உள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதன் மூலம் அதை நாம் நிவா்த்தி செய்ய முடியும்.

பேரவைத் தோ்தலில் தேமுதிகவின் நிலைப்பாடு குறித்து டிசம்பா் மாதத்தில் நடைபெறும் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொருத்து ஜனவரி மாத இறுதிக்குள் கட்சித் தலைமை அறிவிக்கும் என்றாா் அவா்.

அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலா் ஆறுமுகநயினாா், வடக்கு மாவட்டச் செயலா் அழகா்சாமி ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், கட்சியின் 16-ஆவது ஆண்டை முன்னிட்டு திருச்செந்தூா், ஆத்தூா், உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுதீஷ் கட்சிக் கொடியேற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com