காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை: துரைமுருகனுக்கு முதல்வர் விளக்கம்

மாணவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டதே தவிர, காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை: துரைமுருகனுக்கு முதல்வர் விளக்கம்
காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை: துரைமுருகனுக்கு முதல்வர் விளக்கம்


சென்னை: மாணவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டதே தவிர, காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

விழுப்புரத்தில் புதிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கு பழனிசாமி பேரவையில் இன்று விளக்கம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆதங்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. கல்விக்கு முன்னுரிமை கொடுப்பதற்காகத் தான் இந்த பல்கலைக்கழகம் பிரிக்கப்படுகிறது. அது உங்களுக்குத் தெரியும். அது பிற்படுத்தப்பட்ட பகுதி. அங்கு இருக்கின்ற மாணவர்கள் மேலும் உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில்தான் இந்த பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டதே தவிர, வேறு ஒன்றும் இல்லை. இப்பொழுது புதிய கல்லூரிகள் அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன. சட்டத்துறை அமைச்சர் சொல்கின்றபொழுது எத்தனை கல்லூரிகள் இப்பொழுது உருவாக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். 

அப்பொழுது உருவாக்கப்பட்டதற்கும், இப்பொழுது உருவாக்கப்பட்டதற்கும் எத்தனை புதிய கல்லூரிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதற்குத் தக்கவாறு, பல்கலைக் கழகங்களை பிரித்தால்தான் நிர்வாக வசதி சிறப்பாக இருக்கும், மாணவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் இந்த பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டதே தவிர, நீங்கள் சொல்வதைப் போல காழ்ப்புணர்ச்சி எதுவும் இல்லை என்பதை தங்கள் வாயிலாக எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் இருக்கும் பல்கலைக்கழகங்களை பிரித்துதான் ஒன்றோடு இணைத்திருக்கிறோம். ஏற்கனவே கூறிய மாதிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருக்கின்ற கல்லூரிகளையெல்லாம் ஒன்றாக இணைத்து, புதிய பல்கலைக்கழகம் உருவாக்குகிறோம். இதில் என்ன பிரச்சனை இருக்கிறதென்றுதான் எனக்குத் தெரியவில்லை. ஏன் இவ்வளவு ஆதங்கப்படுகிறீர்கள்? பல்கலைக்கழகம் பிரிப்பதற்கே நீங்கள் விட மாட்டேன் என்கிறீர்கள், பெயர் வைத்தால் விடவா போகிறீர்கள்? ஆகவே, மாணவர்களுடைய எதிர்காலம், பெற்றோர்களுடைய எதிர்காலம், அவர்கள் வைக்கின்ற கோரிக்கையை அரசு நிறைவேற்றுவது அரசினுடைய கடமை. அதனால்தான் நாங்கள் செய்கிறோம். இன்றைக்கு புதிதாக அரசு கலை கல்லூரிகளை எவ்வளவு உருவாக்கியிருக்கிறோம், சட்டக் கல்லூரிகளை எவ்வளவு உருவாக்கியிருக்கிறோம், மருத்துவக் கல்லூரிகளை எவ்வளவு உருவாக்கியிருக்கிறோம். ஆகவே, கல்லூரிகள் அதிகமாக இருக்கும்பொழுது நிர்வாக வசதிக்காக பிரிக்கிறோமே தவிர நீங்கள் சொல்வது போல எந்தவித காழ்ப்புணர்ச்சியும் இல்லை என்பதை மீண்டும், மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப் பகுதி ஒரு பின்தங்கிய பகுதி. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் எந்த அளவிற்கு உயர்கல்வி படிக்கிறார்கள் என்ற எண்ணிக்கை உங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அப்படியிருக்கின்ற காரணத்தால், அந்தப் பகுதியிலிருக்கின்ற மாணவச் சமுதாயம் உயர்கல்வி அதிக அளவிலே படிக்க வேண்டும், நிர்வாக பிரச்சனைக்காக இது பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதை தங்கள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com