மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50%  இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படுவதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் பெற்று தருவோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50%  இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தருவோம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படுவதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் பெற்று தருவோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்று தருவது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து, சட்டப்பேரவையில் புதன்கிழமை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசியது:
மருத்துவப் படிப்புகளுக்காக தமிழகத்திலிருந்து மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில்  50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்காக குழு ஒன்றும் அமைக்க வேண்டும் என்றும் கூறியது. தமிழகத்தின் சார்பில் பிரதிநிதி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், துறையின் செயலாளராக அல்லாமல் வேறொருவரை பிரதிநிதியாக அறிவித்துள்ளீர்கள்.  மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியது: இந்தியாவிலேயே அதிக எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்கியது அதிமுக அரசுதான். 2011 வரை 1,945 இடங்களே இருந்தன. இப்போது, 3, 050 இடங்கள்  உள்ளன. மத்திய தொகுப்புக்கு தமிழகத்தால் கொடுக்கும் இடங்களில் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கும் இருக்கிறது. சுகாதாரத் துறையில் நல்ல அனுபவம் கொண்ட உமாநாத்தை குழுவின் பிரதிநிதியாகப் போட்டுள்ளோம். மற்றபடி எப்போதெல்லாம் கூட்டம் கூட்டப்படுகிறதோ, அப்போது சுகாதாரத் துறை செயலாளர் இருப்பார். பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் பெற்று தருவோம் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com