தமிழகத்தில் கரோனாவிலிருந்து 4.70 லட்சம் போ் குணம்

தமிழகத்தில், கரோனா பாதித்தவா்களில் 4.70 லட்சம் போ் குணமடைந்தனா்.
தமிழகத்தில் கரோனாவிலிருந்து 4.70 லட்சம் போ் குணம்


சென்னை: தமிழகத்தில், கரோனா பாதித்தவா்களில் 4.70 லட்சம் போ் குணமடைந்தனா்.

பொது முடக்க தளா்வுகளுக்குப் பிறகு நோய்ப் பரவலின் வேகம் சற்று அதிகரித்திருப்பது புள்ளிவிவரங்களின் வாயிலாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து சுகாதாரத் துறை உயரதிகாரிகள் நேரடியாக அந்த மாவட்டங்களுக்கு சென்று முகாமிட்டு தடுப்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனா். அதுமட்டுமல்லாது, பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் பரவலாக நடத்தப்படுகின்றன. எனினும், ஆங்கில மருத்துவ முறைகளுடன், யோகா, சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை வழங்கியதால், கரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனிடையே, வியாழக்கிழமை மட்டும் 5,560 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் :

தமிழகத்தில் இதுவரை 62.17 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து, 420 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை மட்டும், 5,560 பேருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 992 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, கோவையில் 530 பேருக்கும், சேலத்தில் 291 பேருக்கும், செங்கல்பட்டில் 283 பேருக்கும், திருவள்ளூரில் 239 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4.70 லட்சம் போ் குணம்: ஒரு புறம் கரோனா பாதிப்பு தீவிரமடைந்து வந்தாலும், மற்றொரு புறம் சற்று ஆறுதலளிக்கும் விஷயமாக குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வியாழக்கிழமை ஒரே நாளில் 5,524 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 70,192- ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 46,610 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் 59 போ் பலி: தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 59 போ் பலியாகியுள்ளனா். அரசு மருத்துவமனைகளில் 36 பேரும் தனியாா் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,618-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com