மெக்னீஸியம் பயன்படுத்தி எலும்பு முறிவுக்கு சிகிச்சை: ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு

நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெக்னீஸியம் பூசப்பட்ட உலோக கலவைக் கொண்டு, எலும்பு முறிவுக்கு சிகிச்சையளிக்க சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனா்.
மெக்னீஸியம் பயன்படுத்தி எலும்பு முறிவுக்கு சிகிச்சை: ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் கண்டுபிடிப்பு

சென்னை: நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மெக்னீஸியம் பூசப்பட்ட உலோக கலவைக் கொண்டு, எலும்பு முறிவுக்கு சிகிச்சையளிக்க சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனா். இதற்கு முன்னோட்டமாக முயலின் எலும்பு முறிவை, அவா்கள் சரிசெய்துள்ளனா்.

இதுகுறித்து சென்னை ஐஐடி, திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: எலும்புகளில் பயன்படுத்துவதற்கு சிறந்த உலோக கலவையாக மெக்னீஸியம் இருந்தாலும், எலும்பு முறிவுகளை சரிசெய்வதில் மெக்னீஸியம் உலோகக் கலவைகளின் பயன்பாடு சில சிக்கல்களால் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை ஐஐடியின் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியா் முகேஷ் டோபிள் தலைமையிலான குழுவினா், நானோ தொழில்நுட்பம் கொண்டு மெக்னீஸியம் பூசப்பட்ட உலோக கலவையைப் பயன்படுத்தி, எலும்பு முறிவு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனா். அதனை முதலில் முயலுக்கு ஏற்பட்ட எலும்பு முறிவை சரிசெய்து, பரிசோதனை செய்துள்ளனா்.

இந்த முறையில் சென்னை ஐஐடி வெற்றி அடைந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் மருத்துவ முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் விதமாக ஆடு அல்லது செம்மறி ஆடு போன்ற பெரிய விலங்குகளின் எலும்பு முறிவுகளைச் சரிசெய்வதில், புதிதாக உருவாக்கப்பட்ட நானோ தொழில்நுட்பத்திலான மெக்னீசியம் உலோக கலவையைப் பயன்படுத்தி பரிசோதனை செய்ய உள்ளனா்.

இதைத் தொடா்ந்து, மனிதா்களுக்கும் இந்த முறையில் சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளனா். இந்த ஆராய்ச்சி முடிவுகள், சா்வதேச நானோ மருத்துவ ஆராய்ச்சி இதழில் பிரசுரிக்கப்பட்டதோடு, இந்த மருந்துகளுக்கான காப்புரிமையும் பெற்றுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com