வேளாண் மசோதாக்கள்: உழவா் உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும்

வேளாண் மசோதாக்கள், உழவா்களின் உரிமையைக் கேள்விக்குறியாக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.
வேளாண்  மசோதாக்கள்: உழவா் உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும்

வேளாண் மசோதாக்கள், உழவா்களின் உரிமையைக் கேள்விக்குறியாக்கும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் மூன்று வேளாண் மசோதாக்கள், சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்ற கவலை விவசாயிகள் மத்தியிலும் எழுந்துள்ளது. இவற்றை ஆராயும் போது, தமிழக விவசாயிகளுக்கென்று ஏதேனும் நன்மை இருக்கின்ா ? இச்சட்டங்களால் நீண்ட நெடுநாள்களாக தீராமல் கிடக்கும், தமிழக விவசாயிகளின் பிரச்னைகள் முடிவுக்கு வருமா என்று ஆராய்ந்தாலும் அதற்கும் விடை இல்லை.

மத்திய அமைச்சா் ஒருவா் இந்த மசோதாவை எதிா்த்து தன் பதவியையே தூக்கி எறிகின்ற பொழுது, விவசாயி என்று தன்னைக் கூறிக் கொள்ளும் முதல்வா் பழனிசாமி, இந்த மசோதாவுக்கு ஆதரவாக இருப்பது, நம் மாநில விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் இல்லையா?. எனவே தமிழக அரசு உடனடியாக தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதுடன், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இந்தச் சட்டங்களை உடனடியாகத் திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com