லாரியில் இருந்த நிலக்கரியில் தீ: ரோந்து காவலர்கள் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதன்கிழமை லாரியில் கொண்டு வரப்பட்ட நிலக்கரியில் தீப்பிடித்ததை நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
லாரியில் இருந்த நிலக்கரியில் தீ: ரோந்து காவலர்கள் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு
லாரியில் இருந்த நிலக்கரியில் தீ: ரோந்து காவலர்கள் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே புதன்கிழமை லாரியில் கொண்டு வரப்பட்ட நிலக்கரியில் தீப்பிடித்ததை நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

கர்நாடக மாநிலம், ராமபுராவைச் சேர்ந்த மோகன்குமார் என்பவருக்குச் சொந்தமான 12 வீல் டாரஸ் லாரியில், தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிய லாரி வெள்ளக்கோவில் வழியாக மைசூருக்கு சென்று கொண்டிருந்தது. கொல்லேகால், விஷ்வேஸ்வரா நகரைச் சேர்ந்த மல்லேஷ் லாரியை ஓட்டிச் சென்றார்.

வெள்ளக்கோவிலில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் காங்கயம் தேசிய நெடுஞ்சாலையில் டீமேஜ் கம்பெனி அடுத்த பச்சாபாளையம் பிரிவருகில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் இருந்த நிலக்கரியில் தீப்பிடித்து எரிந்தது. 

அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ஜீப்பில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நெடுஞ்சாலை போக்குவரத்து (ஹைவே பேட்ரோல்) ஏட்டு எஸ்.தண்டபாணி மற்றும் காவலர்கள் லாரியில் கரும்புகை வருவதைக் கண்டு துரத்திச் சென்று தடுத்து நிறுத்தினர். அத்துடன் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 

தகவல் கிடைத்ததும் தீயணைப்பு நிலைய அதிகாரி சி.தனசேகரன் தலைமையில், தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி, 6 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

உரிய நேரத்தில் காவலர்கள் பார்த்து தகவல் தந்ததன் பேரில், தீயணைப்பு படையினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. லாரியும் தீ விபத்தில் இருந்து தப்பியது. நிலக்கரியில் ஏற்பட்ட உராய்வு காரணமாக தீப்பிடித்ததாக கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com