பம்புசெட் மோட்டார் ரூமில் பதுக்கி வைத்த 800 கிலோ குட்கா பறிமுதல்

குருத்தானமேடு பகுதியில் விவசாய நிலத்திற்கான பம்ப் செட் மோட்டார் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 800 கிலோ தடை செய்யப்பட்ட பான், குட்காவை கவரப்பேட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
பம்புசெட் மோட்டார் ரூமில் பதுக்கி வைத்த 800 கிலோ குட்கா பறிமுதல்


கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் அருகே உள்ள குருத்தானமேடு பகுதியில் விவசாய நிலத்திற்கான பம்ப் செட் மோட்டார் குடோனில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 800 கிலோ தடை செய்யப்பட்ட பான், குட்காவை கவரப்பேட்டை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் அருகே உள்ள குருத்தானமேடு கிராமத்தில் வயலுக்கு நீர் பாய்ச்சும் பம்ப் செட்டின் மோட்டார் குடோனிற்கு மினி லாரி ஒன்று மூட்டைகளை கொண்டு வந்து இறக்கி செல்வதாக கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ரமேஷிற்கு தகவல் கிடைத்தது. இது குறித்து டிஎஸ்பி ரமேஷ் உத்தரவின் பேரில் கவரப்பேட்டை காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர் அழகேசன் நேற்று நள்ளிரவு சம்பவ இடத்திற்கு சென்று சோதனை இட்டார்.

அப்போது அந்த மோட்டார் குடோனில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட பான், குட்கா பதுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து இது குறித்து போலீஸார் விசாரித்த போது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவரும் கும்மிடிப்பூண்டி பஜாரில் சிகரெட் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்துவரும் பிரபத்சிங்(30) என்கிறவர் அந்த மூட்டைகளை மோட்டார் குடோனில் பதுக்கி வைத்தது தெரியவந்தது.

தொடர்ந்து பிரபத்சிங்கை கைது செய்த  போலீஸார், இது குறித்து வழக்குப் பதிவு  செய்து விசாரணை நடத்தியதில் அந்த குடோனில்ரூ. 4 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட 800 கிலோ பான் குட்கா இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து கவரப்பேட்டை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com