தமிழக பேரவைத் தேர்தலில் 72.81% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.
தமிழக பேரவைத் தேர்தலில் 72.81% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு 
தமிழக பேரவைத் தேர்தலில் 72.81% வாக்குப்பதிவு: சத்யபிரத சாஹு 

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, தமிழக பேரவைத் தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது 72.81 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் புதிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 6.28 கோடி வாக்காளர்களில் 4.57 கோடி பேர்  வாக்களித்துள்ளனர்.  இவர்களில் 2.31 கோடிப் பெண் வாக்காளர்கள் என்றும், 2.26 கோடி ஆண் வாக்காளர்கள், 1,419 மூன்றாம் பாலினத்தவர்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1.71 கோடி பேர் வாக்களிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தேர்தலுக்கு மறுநாள் ஏப்ரல் 7-ஆம் தேதி தெரிவித்திருந்தாா். மேலும், மாவட்ட வாரியாகவும் வாக்குப் பதிவு சதவீத விவரங்களை அவா் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், புதிய வாக்குப்பதிவு விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மாவட்டம் மற்றும் தொகுதி வாரியாக எத்தனைப் பேர் வாக்களித்தனர் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com