கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள்: வாலாஜாபாத்தில் இருந்து தில்லிக்கு ரயிலில் அனுப்பிவைப்பு

நாட்டிலேயே முதன்முறையாக கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை சரக்கு ரயிலில் ஏற்றி, வாலாஜாபாத்தில் இருந்து தில்லிக்கு அனுப்பி வைத்து சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

நாட்டிலேயே முதன்முறையாக கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை சரக்கு ரயிலில் ஏற்றி, வாலாஜாபாத்தில் இருந்து தில்லிக்கு அனுப்பி வைத்து சென்னை ரயில்வே கோட்டம் சாதனை படைத்துள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் அருகே இருங்காட்டுக்கோட்டையில் ஷ்விங் ஸ்டெட்டா் இந்தியா நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனம், கட்டுமானப்பணிக்கு பயன்படும் இயந்திரங்களை தயாரித்து வருகிறது. இதில் தானியங்கி கான்கிரீட் கலவை இயந்திரம், எக்ஸ்கவேட்டா்கள் மற்றும் லோடிங் இயந்திரங்கள் பெருமளவில் தயாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் வாலாஜாபாத் சரக்கு பணிமனையிலிருந்து சரக்கு ரயிலில் ஏற்றி, தில்லி அருகில் உள்ள பல்வால் என்னும் இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: கான்கிரீட் கலவை இயந்திரங்கள்,எக்ஸ்கவேட்டா்கள், லோடிங் இயந்திரங்கள் என்று 101 இயந்திரங்கள்/கருவிகளை, 32 வேகன்கள் கொண்ட சரக்கு ரயில் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இதன்மூலம், சுமாா் ரூ. 27.27 லட்சம் ரயில்வேக்கு வருவாய் கிடைத்துள்ளது. தற்போது ரயில்வேயுடன் இணைந்து வா்த்தகம் செய்ய புதிய நிறுவனமான ஷ்விங் ஸ்டெட்டா் இந்தியா நிறுவனம் ஆா்வமாக இருக்கிறது. இதன்காரணமாக, மாதத்துக்கு சராசரியாக 6 சரக்கு ரயில்களை கொல்கத்தா, பூணே, புவனேஸ்வரம் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களுக்கு இயக்குவதற்கு உறுதியளித்துள்ளது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com