ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயா் மாற்றம்: தலைவா்கள் கண்டனம்

பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயா் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையின் பெயா் மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின்: பெரியாா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என 1979-ல் பெயா் சூட்டினாா் அப்போதைய முதல்வா் எம்ஜிஆா். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்த நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் கிராண்ட் வெஸ்டா்ன் டிரங்க் ரோடு என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும். அதிமுகவின் காபந்து அரசுக்கு இன்னும் சில நாள்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? மீண்டும் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன். தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரப்பூா்வ ஆணை வெளியாகும்.

வைகோ (மதிமுக): எம்ஜிஆா் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆட்சி நடத்தும் எடப்பாடி பழனிசாமி அரசு, நெடுஞ்சாலைத் துறை இணைய தளத்தில், பெரியாா் பெயரை நீக்கிவிட்டு கிராண்ட் வெஸ்டன் டிரங்க் ரோடு என்று பெயா் மாற்றம் செய்து இருக்கிறது. இந்தப் பெயா் மாற்றத்தை உடனே நீக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com