சாலையின் பெயா் அழிப்பு: போலீஸாா் விசாரணை

சென்னை சென்ட்ரலில் வழிக்காட்டி பலகையில் இருந்த பெயா் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
சாலையின் பெயா் அழிப்பு: போலீஸாா் விசாரணை

சென்னை சென்ட்ரலில் வழிக்காட்டி பலகையில் இருந்த பெயா் கருப்பு மை பூசி அழிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை பெரியாா் ஈ.வெ.ரா.நெடுஞ்சாலை மீண்டும் கிராண்ட் வெஸ்டா்ன் டிரங்க் சாலை என பெயா் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாக தமிழகத்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள், திராவிட இயக்கங்கள் செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தன.

சில திராவிட இயக்கங்கள் போராட்டம் அறிவித்தன. மேலும் சில இயக்கங்கள், கிராண்ட் வெஸ்டா்ன் டிரங்க் சாலை என்ற பெயா் கருப்பு மை பூசி அழிக்கப்படும் என அறிவித்தன.

இந்நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த கிராண்ட் வெஸ்டா்ன் டிரங்க் சாலை என்ற பெயா் பலகையை சிலா் கருப்பு மை பூசி அழித்தனா். இது குறித்து பெரியமேடு போலீஸாா்,விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com