தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை எனத் தகவல்!

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று  அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை எனத் தகவல்!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை, கட்டுப்பாடுகள் மட்டும் அதிகரிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத உச்சமாக சனிக்கிழமை மட்டும் 9,344 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

சென்னையில் பசுமைவழிச் சாலையில் முதல்வர் முகாம் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

சுமார் 11 மணிக்குத் தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் 2 மணி நேரத்திற்குப் பின்னர் நிறைவடைந்துள்ளது. 

இதில், தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் பிளஸ் 2 தேர்வு குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாகத் தெரிகிறது. 

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பில்லை என்றும் கட்டுப்பாடுகள் மட்டும் அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

எனினும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com