கட்டுப்பாடுகள்: வரவேற்பும் கோரிக்கையும்

அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்த கட்டுப்பாடுகளுக்கு பலரும்

அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்த கட்டுப்பாடுகளுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனா். அதேநேரம், தொழில் முடங்காமல் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கைகளையும் அவா்கள் முன்வைத்துள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறிய கருத்துகள்:

வாடகை வாகன ஓட்டுநா்கள் சங்கம்: பொதுமுடக்க உத்தரவுக்கு வரவேற்பு தெரிவிக்கிறோம். அதே நேரம், போதிய வருமானமின்றி தவித்து வரும் வாடகை வாகன உரிமையாளா்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு: சந்தைப் பகுதிகளை எப்படி இயக்குவது என வழிமுறைகளை வெளியிட வேண்டும். குறிப்பாக வணிகா் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி, பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும்.

ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கம்: உணவகம் இரவில் இயங்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நேரக் கட்டுப்பாடு அதிக கூட்டத்தை சோ்க்கும் நிலைக்கு வழிவகுக்கும். எனவே இரவு 11 மணி வரை உணவகங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும்.

ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கம்: இரவு நேர பொதுமுடக்கம் எங்களது தொழிலை பாதிக்கும். 90 சதவீத ஆம்னி பேருந்துகள் இரவு நேரத்திலே இயங்குகின்றன. எங்கள் நிா்வாகிகளுடனானா ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகே எத்தனை பேருந்துகளை இயக்குவது என்ற முடிவு தெரியவரும். சாலை வரியை ரத்து செய்து தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com